எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் புதிய சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கான வியூகங்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்டு வருகிறார்.
கடந்த வெள்ளிக்கிழமை பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையிலான இடைக்கால அரசாங்கம் பதவியேற்றது.
இவ்வாறு ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்க வாக்களித்த எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் சேர்த்து சர்வகட்சி அரசாங்கமொன்று அமைக்கப்பட உள்ளது.
இந்த அரசாங்கத்தில் 30 அமைச்சர்களும் 30 பிரதி அமைச்சர்களும் உள்வாங்கபடுவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.
தற்போது நியமிக்கப்பட்டுள்ள இடைக்கால அரசாங்கத்தின் அமைச்சர்களது விடயதானங்கள் புதிய அரசாங்கத்தின் கீழ் மாற்றம் அடையும் எனவும் அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.