Wednesday, January 15, 2025
25.5 C
Colombo
ஏனையவைநாட்டின் நலனுக்காக கட்சி பேதங்களை கடந்து செயற்பட தயார் - பிரதமர்

நாட்டின் நலனுக்காக கட்சி பேதங்களை கடந்து செயற்பட தயார் – பிரதமர்

நாட்டின் பிரச்சினைகளை தீர்க்க அரசியல் பேதங்களைக் கடந்து செயற்படத் தயார் என புதிய பிரதமராக பதவியேற்றுள்ள தினேஸ் குணவர்த்தன தெரிவித்தார்.

பிரதமராக பதவியேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாம் இன்று எதிர்நோக்கும் பிரச்சினைகள் என்பது, இதற்கு முன்னர் நாம் சந்தித்திராத ஒன்றாகும்.

அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக நாம் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகிறோம்.

இன்று நாம் அமைச்சரவையை நியமித்த பின்னர், நாம் சர்வதேச நாடுகள் மற்றும் அமைப்புக்களுடன் கலந்தாலோசிக்கவுள்ளோம்.

எமது பயணத்தை மீண்டும் சக்திமிக்கதாக மாற்ற நாம் நடவடிக்கை எடுப்போம். மக்களின் கோரிக்கைள் அனைத்தையும் கருத்திற்கொண்டே நாம் இந்த செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளோம்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாட்டின் அரசமைப்பை விரைவில் மாற்றவுள்ளாக அறிவித்துள்ளார். இவை அத்தியாவசியமாகும்.

நாட்டில் எரிவாயு மற்றும் உரப் பிரச்சினை இருந்தது. இவற்றை நாம் நிவர்த்தி செய்துள்ளோம்.

அதேபோன்று, எரிபொருள் பிரச்சினை உள்ளது. இதனையும் விரைவில் நிவர்த்தி செய்வோம்.

எமக்கிடையில் அரசியல் வேறுபாடுகள் இருந்தாலும், நாட்டின் எதிர்க்காலத்தை கருத்தில் கொண்டு, அரசியல் பேதமின்றி செயற்பட தயாராகவே உள்ளோம் என்றார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles