தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் ‘தாராளவாத ஜனநாயகவாதி’ என்ற தனது பிம்பத்தை முற்றிலுமாக அழித்து, ஒரு அடக்குமுறை சர்வாதிகாரியாக தன்னை ரணில் விக்ரமசிங்க வெளிப்படுத்தியுள்ளதாக பாட்டலி சம்பிக்க ரணவக்க MP தெரிவித்துள்ளார்.
தமது உத்தியோபூர்வ ட்விட்டர் பதிவிலே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக பதவிக்கு வந்து 24 மணி நேரத்திற்குள் ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தன்னை ஒரு சர்வாதிகாரியாக வெளிப்படுத்தியுள்ளார்.
கடந்த 45 ஆண்டுகளாக ‘தாராளவாத ஜனநாயகவாதி’ என்ற தனது பிம்பத்தை ரணில் அழித்து, ஒரு அடக்குமுறை சர்வாதிகாரியாக தன்னை ரணில் விக்ரமசிங்க வெளிப்படுத்தியுள்ளார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.