Wednesday, July 16, 2025
27.8 C
Colombo
அரசியல்மக்களுக்காக என்னையே தியாகம் செய்வேன் - சஜித்

மக்களுக்காக என்னையே தியாகம் செய்வேன் – சஜித்

எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும ஆகியோர் இன்று (19) கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இந்த விசேட செய்தியாளர் சந்திப்பு இன்று (19) நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இந்த தருணத்தில் நாட்டு மக்களுக்காக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

நாட்டை கட்டியெழுப்ப தான் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டு மக்களுக்கான ஜனநாயக உரிமைகளை வென்றெடுப்பதற்கும், 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை மீண்டும் அமுல்படுத்துவதற்கும், நாட்டை பொருளாதார, சமூக மற்றும் கலாசார ரீதியில் முன்னோக்கி கொண்டு செல்வதற்கும் அர்ப்பணிப்புடன் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அத்துடன், நாட்டு மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதே தனதுஒரே நோக்கம் எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், அதற்காகத் தன்னையே தியாகம் செய்வதாகவும் குறிப்பிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles