புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வேட்புமனுக்களை பெறும் நடவடிக்கை இன்று (19) நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற பொது செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி பதவிக்கு ஒன்றுக்கு மேற்பட்ட எம்.பிகள் முன்மொழியப்பட்டுள்ளதால், ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நாளை (20) நாடாளுமன்றத்தில் நடைபெறும் என அவர் மேலும் தெரிவித்தார்.