தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமைக்குழு நாளை (19) கூடுகிறது.
மாலை 6 மணிக்கு கொழும்பு நுகேகொடை ஏகநாயக அவனியுவில் அமைந்துள்ள கட்சி செயலகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில், 20ம் திகதி நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ள ஜனாதிபதி போட்டி குறித்த தீர்மானம் எடுக்கப்படும்.
இதில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்கள் தொடர்பிலும் கலந்துரையாடி முடிவெடுக்கப்படும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி ஊடகங்களுக்கு தெரிவத்துள்ளார்.