புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான நாடாளுமன்ற வாக்கெடுப்புக்கு எம்.பி.க்கள் அனைவரும் தயாராகி வருகின்றனர்.
பல்வேறு தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சில கட்சித் தலைவர்கள் தங்கள் கட்சியின் கருத்தைப் பகிரங்கப்படுத்தியுள்ளனர்.
ஆனால், கட்சித் தலைவர் அல்லது தலைவரின் கருத்துக்கு இணங்காமல் , சுயேச்சையாக தங்கள் வாக்குகளைப் பயன்படுத்துவதாக பல எம்.பி.க்கள் கூறுகின்றனர்.
எந்தவொரு வேட்பாளருக்கும் வாக்களிப்பதில்லை என தமது கட்சி தீர்மானித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் தெரிவித்திருந்தார்.
எனினும், ரணில் விக்கிரமசிங்கவுக்கு தமது வாக்குகளை அளிப்பதாகவும், அவர் சுமார் 123 வாக்குகளைப் பெறுவார் எனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் MP சாமர சம்பத் உறுதியளித்துள்ளார்.