ஜனாதிபதிக்கான போட்டியில் இருந்து விலகுவதற்கு JVPயின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க சில நிபந்தனைகளை விதித்துள்ளார்.
காலியில் JVPயின் பிரதிநிதிகளை சந்தித்த பின்னர் ஊடகங்கள் மத்தியில் உரையாற்றிய போது அவர் இந்த நிபந்தனைகளை விதித்தார்.
நாடாளுமன்றத்தில் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவிக்கு பரிந்துரைக்க வேண்டும்.
அவர்கள் 2 பேரும் நீண்ட காலத்துக்கு அந்த பதவிகளை தக்க வைத்துக் கொள்ளும் ஆசை இல்லாதவர்களாக இருக்க வேண்டும்.
அதேநேரம் புதிதாக நியமிக்கப்படும் ஜனாதிபதியும் பிரதமரும் குறுங்காலத்தில் நாட்டை ஸ்திரப்படுத்துவதற்கான திட்டத்தை முன்வைக்க வேண்டும்.
துரிதமாக தேர்தலொன்றை நடத்துவதற்கு இணங்க வேண்டும்.