நாட்டின் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தற்போது பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் அரசியல் யாப்பின்படி சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்தன பதில் பிரதமராக நியமிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.
இதற்கான வலியுறுத்தலை மொட்டு கட்சி வழங்கிவருவதாக பாராளுமன்ற உறுப்பினர் சிசிர ஜயகொடி தெரிவித்துள்ளார்.
இதன்படி தினேஷ் குணவர்தன பெரும்பாலும் நாளைய (16) தினம் பதில் பிரதமராக பதவியேற்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.