அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் 05 அமைச்சர்கள் நேற்று (10) தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மற்றும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார ஆகியோர் தமது அமைச்சுப் பதவிகளை நேற்று (09) இராஜினாமா செய்ததுடன், விவசாயம், வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் அமைச்சர் மஹிந்த அமரவீர நேற்று (10) காலை தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்தார்.
மேலும், முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேரா நேற்று (10) பிற்பகல் தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, ஜனாதிபதியின் அறிவித்தலுக்கு அமைய, தனது அமைச்சுப் பதவியை கடந்த புதன்கிழமை இராஜினாமா செய்தார்.
ஜனாதிபதி எங்கு இருக்கிறார் என்பது இதுவரை வெளிவராததால், பதவி விலகுவதாக அறிவித்த அமைச்சர்கள் எவரும், ஜனாதிபதியிடம் இராஜினாமா கடிதத்தை சமர்ப்பிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.