ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் தொலைபேசியில் உரையாடலொன்றை மேற்கொண்டதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்த உரையாடல் மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாக ஜனாதிபதி ட்விட்டர் பதிவொன்றில் தெரிவித்துள்ளார்.
கடந்த கால சவால்களை சமாளிக்க ரஷ்ய அரசாங்கம் வழங்கிய அனைத்து ஆதரவிற்கும் நன்றி தெரிவித்த அதேவேளை, தற்போதைய பொருளாதார சவால்களை தோற்கடிப்பதற்காக இலங்கைக்கு எரிபொருளை இறக்குமதி செய்ய கடன் ஆதரவை கோரியதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.