அமைச்சர் நிமல் சிறீபால டி சில்வா அமைச்சுப் பதவிலியிருந்து விலகுவதாக ஜனாதிபதியிடம் கடிதம் கையளித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
தன் மீதான இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான பக்கச்சார்பற்ற சுயாதீனமான விசாரணைகள் முடியும் வரையில் அமைச்சுப் பதவியில் இருந்து விலகுவதாக அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
துறைமுக மற்றும் விமான போக்குவரத்து அமைச்சராக நிமல் சிறிபால டி சில்வா பதவி வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.