இலங்கை நாடாளுமன்றத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இருந்து தற்போது நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் முகவரிகளும் நீக்கப்பட்டுள்ளன.
நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக நாடாளுமன்றத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் தற்போது நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 225 உறுப்பினர்களின் கைப்பேசி இலக்கங்கள் மற்றும் கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் உள்ள அவர்களது வசிப்பிடங்களின் முகவரிகள் ஏற்கனவே உள்ளடக்கப்பட்டிருந்தன.