Thursday, July 17, 2025
29 C
Colombo
அரசியல்வீழ்த்தப்பட்ட ராஜபக்ஷ மீண்டும் எழுகிறார்

வீழ்த்தப்பட்ட ராஜபக்ஷ மீண்டும் எழுகிறார்

ஹம்பாந்தோட்டையில் உள்ள ராஜபக்ஷ அருங்காட்சியகம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பெற்றோரின் நினைவாலயத்தை புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

கடந்த மே 09ஆம் திகதி இடம்பெற்ற வன்முறையின் போது இடிக்கப்பட்ட குறித்த நினைவாலயத்தை புனரமைப்பதற்கு தேவையான பணம் மற்றும் பொருட்களை சேகரிப்பதற்கான பொறுப்பு மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் உயர் பொலிஸ் அதிகாரியினால் பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அதற்கமைய, கல், மணல், சீமேந்து, மரப்பலகைகள் மற்றும் நிதியுதவி என்பவற்றை எவ்வாறேனும் பெற்றுக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கப்பட்டதை தடுக்காத காரணத்தினால் குறித்த உயர் அதிகாரிக்கு இடமாற்றம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் தனது இடமாற்றத்தை தடுக்கும் நோக்கில் அவர் இவ்வாறு செயற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles