எமது நாட்டின் வரலாற்றில் கோட்டாபய ராஜபக்ஷவே மிகவும் முட்டாள்தனமான அரசர் என JVP தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
JVP இனால் முன்னெடுக்கப்படும் அரசாங்கத்திற்கு எதிரான அணிவகுப்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கோட்டாபயவால் எதுவும் செய்ய முடியாது. அவர் நம் நாட்டின் வரலாற்றில் மிகவும் முட்டாள் மன்னன். பொருளாதாரம் தொடர்பில் அவருக்கு எதுவும் தெரியாது. தான் ஆட்சியில் இருப்பதால் தான் நாடு இப்படியாவது காப்பாற்றப்பட்டுள்ளதாக கோட்டாபய நம்புவதாக அவருக்கு நெருக்கமான ஒருவர் என்னை தொடர்பு கொண்ட போது கூறினார்” என்றார்.