Friday, March 20, 2026
30.6 C
Colombo
அரசியல்பசிலின் விருப்பத்திற்காகவே நான் MP ஆனேன் - தம்மிக்க பெரேரா

பசிலின் விருப்பத்திற்காகவே நான் MP ஆனேன் – தம்மிக்க பெரேரா

பசில் ராஜபக்ஷவின் தனிப்பட்ட விருப்பத்திற்கு அமையவே தான் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டதாக தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.

பசில் ராஜபக்ஷ பதவி விலகியதை அடுத்து அந்த வெற்றிடத்திற்கு வேறு ஒருவரின் பெயர் முன்மொழியப்பட்டிருந்தது எனவும் பசிலின் தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையில் தனக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்கினார் எனவும் அவர் கூறியுள்ளார்.

பசில் ராஜபக்ஷ தன்னுடன் அடிக்கடி உரையாடுவார் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்கியமை குறித்து அவருக்கு தான் மரியாதை செலுத்துவதாகவும் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.

அத்துடன் இளைஞர்களின் பிரச்சினைகளுக்கு தன்னால் தீர்வை வழங்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles