Friday, May 2, 2025
29 C
Colombo
அரசியல்பிரதமரின் விசேட அறிவிப்பு

பிரதமரின் விசேட அறிவிப்பு

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நாட்டின் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வது தொடர்பான விசேட அறிவிப்பு ஒன்றை நாடாளுமன்றில் வெளியிட்டார்.

அவர் தெரிவித்த சில முக்கிய விடயங்கள் பின்வருமாறு:

இந்தியாவின் 3 பேர் கொண்ட குழு ஒன்று நாளை இலங்கை வரவுள்ளது – இலங்கைக்கு வழங்கக்கூடிய உதவிகள் தொடர்பாக இதன்போது ஆராயப்படும்.

அமெரிக்காவின் குழு ஒன்று அடுத்த வாரம் இலங்கை வரும்.

நாட்டின் பொருளாதாரத்தை மீட்பது இலகுவான விடயம் இல்லை.

சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதே பாதுகாப்பான ஒரே வழி. இந்த மாத இறுதிக்குள் சர்வதேச நாணய நிதியத்துடன் பணிக்குழு ஒப்பந்தம் செய்ய எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டில் விவசாயத்துக்கு முன்னுரிமை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது – காணிகள் ஒதுக்கப்படுகின்றன.

எதிர்கட்சிகள் நாடாளுமன்றத்தை புறக்கணிப்பதால் பலன் இல்லை.

மாற்று திட்டங்கள் இருந்தால் நாடாளுமன்றில் முன்வைத்து விவாதிப்போம்.

நாட்டின் நிலைமைகள் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை மக்களுக்கு விளக்கப்படும்.

இடைகால வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக மக்களுக்கு நிவாரணம் வழங்க 200 பில்லியன் ஒதுக்கப்படும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles