தம்மால், பயிற்றப்பட்டவர்கள், அதிகாரத்தை எவ்வாறு கைப்பற்றுவது என்பதை தெரியாமல் இருப்பதை கண்டு தாம் கவலைப்படுவதாகவும், அந்த விடயத்தில் தாம் தோல்வியடைந்து விட்டதாகவும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர், நாடாளுமன்ற அமர்வுகளை புறக்கணித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியினர் குறித்து இந்த விமர்சனத்தை வெளியிட்டுள்ளார்.
அதிகாரத்தை கொடுத்தபோது ஓடியவர்கள், தற்போது எதிர்க்கட்சியில் இருக்கின்றபோதும் ஓடுகின்றனர்.
ஒளிந்துக்கொண்டும், ஓடிக்கொண்டும் வேலை செய்ய முடியாது என அவர் மேலும் தெரிவித்தார்.