Saturday, May 3, 2025
29 C
Colombo
அரசியல்நாட்டுக்காக பணியாற்றவே நான் எம்.பி ஆனேன் - தம்மிக்க பெரேரா

நாட்டுக்காக பணியாற்றவே நான் எம்.பி ஆனேன் – தம்மிக்க பெரேரா

நாட்டுக்காக பணியாற்றவே நாடாளுமன்றத்திற்குள் வந்ததாக பிரபல வர்த்தகரான தம்மிக்க பெரேரா எம்.பி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்திற்கு வெளியே ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டிற்குப் பணி செய்யவே நான் இங்கு வந்தேன். நான் நாடாளுமன்றத்தில் பதவிப் பிரமாணம் செய்துகொள்வதற்கு முன்னதாக சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான அறிக்கைகளையும் வரி அனுமதி அறிக்கைகளையும் சபாநாயகரிடம் சமர்ப்பித்தேன். அது மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நினைக்கிறேன்.

இப்போது என் கடமை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதுதான். அதை செய்து வெற்றி பெற முடியும் என்று நினைக்கிறேன்.

அத்துடன், தனக்கு நல்லதொரு அமைச்சு கையளிக்கப்படும் என நம்புவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles