21 ஆம் திருத்தச்சட்டமூலத்துக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான அனுமதி கிடைக்கப் பெற்றதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இரட்டை குடியுரிமை கொண்டவர்களுக்கு நாடாளுமன்றத்திற்கு பிரவேசிப்பதற்கு தடை விதித்தல், கணக்காய்வு ஆணைக்குழு மற்றும் மேற்பார்வை குழுக்களை ஸ்தாபித்தல், மத்திய வங்கியின் ஆளுநரை நியமிக்கும் அதிகாரம் அரசியலமைப்பு பேரவைக்கு பாராப்படுத்தல் போன்றன அதில் உள்ளடங்குகின்றன.