இன அழிப்பின் சிந்தனையாகவே குருந்துார் மலையில் புத்தபகவான் சிலையை நிறுவும் செயற்பாடு மேற்கொள்ளப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
இன்று (21) நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வின் போதெ அவர் இதனை தெரிவித்தார்.
அங்கு சிங்கள மக்கள் வாழ்ந்தார்கள் என்று காட்டி, அங்கு சிங்களவர்களை குடியேற்றும் முயற்சியாகவே இது மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை, கோட்டாகோகம போராட்டக்காரர்களின் கவனத்துக்கு ஏன், இன்னும் இந்த குருந்துார் மலை விடயம் வரவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.