ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேரா நாளை (21) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளார்.
எதிர்காலத்தில் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக தம்மிக்க பெரேரா பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவின் இராஜினாமாவால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு தம்மிக்க பெரேரா நியமிக்கப்பட உள்ளார்.