Friday, October 31, 2025
25 C
Colombo
அரசியல்விமலுக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல்

விமலுக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவுக்கு எதிரான குற்றப்பத்திரிகை இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வாசித்து காட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

2010 -2015 ஆம் ஆண்டு வரை அமைச்சராக பதவி வகித்த காலத்தில் 75 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களை சம்பாதித்தமை தொடர்பில் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு தாக்கல் செய்துள்ள வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையே இவ்வாறு வாசித்து காட்டப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க முன்னிலையில் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது சட்ட மா அதிபர் திணைக்களம் திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தமை சுட்டிக்காட்டப்பட்டது.

இந்நிலையில் குற்றப்பத்திரிகையில் சுமத்தப்பட்டுள்ள குற்றங்களுக்கு தான் குற்றவாளி அல்ல நிரபராதி என விமல் வீரவங்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles