ரணில் விக்ரமசிங்க பொறுப்பை ஏற்றுக்கொண்டிருக்காவிட்டால் நாட்டுக்குள் பாரிய அழிவு ஏற்பட்டிருக்கும் என ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
சிறிகொத்தவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையினால் இலங்கைக்கு ஏற்படவிருந்த பாரிய அழிவு ரணில் விக்ரமசிங்கவினால் தவிர்க்கப்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ள பின்வாங்கியவர்களே ரணில் விக்ரமசிங்கவை விமர்சித்து வருகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.
பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டு ஒருமாத காலப்பகுதியில் நாடு எதிர்கொண்ட பிரதான பிரச்சினைக்கு தீர்வுகாண ரணில் விக்ரமசிங்க பல நடவடிக்கைகளை எடுத்திருப்பதுடன், இன்னும் பல விடயங்களை முன்னெடுக்க தேவையான வேலைத்திட்டங்களை செய்துவருவதாக அவர் தெரிவித்தார்.