தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்கான உத்தேச வரைபடமொன்று எதிர்வரும் காலங்களில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவுடனான கலந்துரையாடலின் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்களைப் பெற்றதன் பின்னர் குறித்த உத்தேச வரைபடம் இறுதி செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் என பிரதமர் மேலும் தெரிவித்தார்.