அரசுக்கு சொந்தமான, பயிரிடப்படாத நிலங்களைக் கண்டறிந்து, பயிர்ச்செய்கையில் ஆர்வமுள்ள இளைஞர்களிடம் விரைவில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அரச செலவினத்தை முகாமைத்துவம் செய்வது தொடர்பாக கொழும்பு – கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஆட்களைப் பதிவு செய்தல், குடிவரவு, குடியகல்வு, மோட்டார் போக்குவரத்து திணைக்களம் உள்ளிட்ட ஏனைய அரச நிறுவனங்களையும் மாவட்ட மற்றும் பிரதேச மட்டங்களில் பரவலாக்குவதன் மூலம் அந்த சேவைகளை மிகவும் திறமையாக வழங்க முடியும் என்றும் இவ்வாறான முக்கிய நிறுவனங்களை ஒன்றோடு ஒன்று இணைப்பதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், அரசுக்கு சொந்தமான, பயிரிடப்படாத நிலங்களைக் கண்டறிந்து, பயிர்ச்செய்கையில் ஆர்வமுள்ள இளைஞர்களிடம் விரைவில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
முப்படைகள், சிவில் பாதுகாப்புப் படை மற்றும் சிறைச்சாலைகள் திணைக்களமும் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளில் ஈடுபடத் தயாராக உள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.