Saturday, March 28, 2026
28.4 C
Colombo
அரசியல்கோட்டாவினால் நாடு திவாலாகும்: அன்றே கணித்தார் மங்கள!

கோட்டாவினால் நாடு திவாலாகும்: அன்றே கணித்தார் மங்கள!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞானம் நடைமுறைப்படுத்தப்பட்டால், இலங்கை அடுத்த லெபனனாக மாறும் என முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர எதிர்வுகூறியிருந்ததாக, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நேற்று நாடாளுமன்றில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் கோட்டாபயவின் வரி ஏற்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டால், கிரிஸ் நாடு எதிர்கொண்ட வங்குரோத்து நிலைக்கு செல்லும் என்றும் மங்கள சமரவீர குறிப்பிட்டிருந்ததாக சுமந்திரன் தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்தவர், நாட்டின் தலைமையில் இருந்து விலகவேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றபோதும், அவர் தொடர்ந்தும் பதவியில் இருக்கிறார்.

நாட்டின் இன்றைய நிலைமைக்கு பொறுப்பேற்று பிரதமர் மற்றும் அமைச்சர்கள் விலகியபோது, அந்த அரசாங்கத்துக்கு பொறுப்பான தலைவரும் விலகவேண்டும் என்று சுமந்திரன் வலியுறுத்தினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles