10 சுயேட்சைக் கட்சிகள் அடங்கிய குழுவின் தலைவராக விமல் வீரவன்ச எம்.பி நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார இதனை தெரிவித்துள்ளார்.
கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையகத்தில் நேற்று (31) மாலை நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
‘விமல் வீரவன்சவை எமது குழுவின் தலைவராக முன்னிறுத்த தீர்மானித்துள்ளோம். அடுத்த பிரதமர் பதவிக்கு அவர் ஒரு நல்ல வேட்பாளர்’ என அவர் மேலும் தெரிவித்தார்.