“ரணில் கோ கம”, “கோட்டா கோ கம” ஆகியவற்றை ஒரு புறம் ஒதுக்கி வைத்து விட்டு, ஏற்பட்டுள்ள நெருக்கடியில் இருந்து மீள நடவடிக்கை அனைவரும் எடுக்க வேண்டும் என உதய கம்மன்பில MP தெரிவித்துள்ளார்.
ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
நாடாளுமன்ற தெரிவுக்குழுவிடம் நிதி மற்றும் கண்காணிப்பு அதிகாரத்தை வழங்குவதை ஏற்றுக்கொள்வதாகவும் அதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அவர் கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
காகத்திடம் இருந்து நாடாளுமன்றத்தை காப்பாற்ற முடியும்.
நாடாளுமன்றத்தின் பலம் காகத்திடம் இருக்கின்றது என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.
21வது திருத்தச் சட்டத்தின் ஊடாக இந்த காகத்தின் பிடியில் இருந்து நாடாளுமன்றத்தையும் நாட்டையும் காப்பாற்ற முடியும்.
ஆட்சியிலிருப்பவர்களுக்கு கட்சி பேதமின்றி அனைவரும் ஆதரவு வழங்கி இந்த நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும்.
அதன் பின்னர் பொதுத் தேர்தல் ஒன்றை நடத்த வேண்டும்.
இதன்போது ஆட்சிக்கு தகுந்தவர்கள் யார் என்பதை மக்கள் தீர்மானிக்க சந்தர்ப்பம் வழங்கப்படும்.
அடுத்த மாதத்தில் இருந்து மருந்துகள் மற்றும் உணவுப் பொருட்கள் இன்றி மக்கள் அவதிப்படுவர்.