21 ஆம் திருத்தச் சட்டம் விரைவில் அமைச்சரவையிலும், நாடாளுமன்றிலும் அங்கீகாரத்துக்காக முன்வைக்கப்படவுள்ளது.
அதனை எவ்வாறேனும் நிறுத்துவதற்கான முயற்சிகளை பசில் ராஜபக்ஷ மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
21 ஆம் திருத்தச் சட்டம் அமுலாக்கப்பட்டால் இரட்டைக் குடியுரிமை கொண்ட பசில் ராஜபக்ஷவின் எம்.பி பதவியை இழக்க நேரிடும்.
இந்த நிலையில் அதனை தடுப்பதற்கான கைங்கரியங்களில் அவர் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.