நிதியமைச்சர் பதவிக்கு புதிதாக ஒருவர் நியமிக்கப்படும் வரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்காலிகமாக அப்பதவியை வகிப்பார் என அமைச்சரவைப் பேச்சாளர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
கடந்த மே மாதம் 09ஆம் திகதி அமைச்சரவை கலைக்கப்பட்டதன் பின்னர் இதுவரை நிதியமைச்சர் நியமிக்கப்படவில்லை.
இந்நிலையில், முன்னாள் நிதியமைச்சர் அலி சப்ரியை மீண்டும் நிதியமைச்சராக நியமிக்குமாறு விடுத்த அழைப்பு நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.