Saturday, September 21, 2024
31 C
Colombo
சினிமாமீண்டும் இணையும் விஜய் - லோகேஷ் கூட்டணி

மீண்டும் இணையும் விஜய் – லோகேஷ் கூட்டணி

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய திரைப்படம் மாஸ்டர்.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கோலமாவு கோகிலாஇ டாக்டர் படங்களை இயக்கிய நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் விஜய் நடித்திருந்தார். சமீபத்தில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

தற்போது ‘தோழா’ படத்தை இயக்கிய வம்சி பைடிபல்லி இயக்கத்தில் விஜய் நடித்து வருகிறார்.

இதன் படப்பிப்பு சமீபத்தில் தொடங்கி ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் தளபதி 67 படத்தில் விஜய் மீண்டும் இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் இணையவுள்ளதாக தகவல் வெளியானதுடன், இதனை தற்போது லோகேஷ் கனகராஜ் உறுதி செய்துள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட லோகேஷ் கனகராஜ்இ விஜய்யுடன் அடுத்த படத்தில் இணைவதாகவும், விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles