எம்.பிகளுக்கு நாடளுமன்ற உணவகத்தில் உணவு வழங்குவதை நிறுத்துவதற்கான நடவடிக்கை குறித்து அவதானம் செலுத்தப்படவுள்ளது.
இதனை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன நாடாளுமன்றில் அறிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக வழங்கப்படும் மதியப் போசனத்தை நிறுத்துமாறு கோரி SLPP 53 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பங்களுடன் சபாநாயகருக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.
இது தொடர்பில் எதிர்வரும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துரையாடி தீர்மானம் ஒன்றை எட்டவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.