Saturday, September 13, 2025
31.1 C
Colombo
சினிமா‘விக்ரம்' திரைப்படத்துக்கு வந்த சோதனை

‘விக்ரம்’ திரைப்படத்துக்கு வந்த சோதனை

கமல்ஹாசன் நடித்த ‘விக்ரம்’ திரைப்படம் ஜூன் 3ஆம் திகதி வெளியாகவுள்ளது.

இந்த படத்தை சென்னை உட்பட பல நகரங்களில் அதிகாலை காட்சி திரையிட திட்டமிட்டுள்ளதாகவும், அதிகாலை காட்சிக்கான டிக்கெட்டுகள் 600 ரூபாய் முதல் 900 வரை விற்பனையாகி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன .

இந்த நிலையில் சென்னை நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கு ஒன்றில் அதிகாலை காட்சியில் அதிகமான தொகைக்கு டிக்கெட் விற்பனை செய்யப்படுவதாகவும் அந்த டிக்கெட் விற்பனைக்குரிய வரி அரசுக்கு முறையாக செலுத்தப்படுவதில்லை என்றும், அதுமட்டுமின்றி தமிழக அரசு சட்ட விதிகளின்படி இரவு 12 மணி முதல் காலை 9 மணி வரை திரையரங்குகளில் திரைப்படங்கள் திரையிட கூடாது என்றும் ஆனால் விதிகளை மீறி திரையரங்குகளில் அதிகாலை காட்சிகள் திரையிடப்பட்டு வருவதாகவும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இது குறித்து பதிலளிக்க தமிழக அரசு மற்றும் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவின் காரணமாக ‘விக்ரம் திரைப்படத்திற்கு அதிகாலை காட்சிக்கான அனுமதி கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles