முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் கணக்கில் படமொன்றை பதிவிட்டிருந்தார்.
அந்த பதிவை ‘மஹிந்த அருகில் உள்ள முட்டாள் குரங்கு கூட்டம்’ என பெயரிட்டுள்ளார்.
‘அரசனின் உடலை மறைத்திருந்த ஈயைக் கொல்ல, அவரை குரங்கு வாளால் தாக்கிய கதை’ என்று அவர் மேற்கோள் காட்டியுள்ளார்.
இவ்வாறான முட்டாள்களை அருகில் வைத்திருந்ததன் மூலமே மஹிந்தவின் பதவி பறிபோனது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும், தற்போது அரசாங்கத்தில் இருந்து விலகி நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில ஜனாதிபதியையும் முன்னாள் பிரதமரையும் பல்வேறு சந்தர்ப்பங்களில் விமர்சிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
