நடிகர் ஆதி மற்றும் நடிகை நிக்கி கல்ராணி இருவரினதும் திருமணம் நேற்று (18) இடம்பெற்றது.
மரகத நாணயம் திரைப்படத்திற்கு பின்னர் ஏற்பட்ட காதல், பெற்றோர் சம்மதத்துடன் திருமணத்தில் நிறைவடைந்துள்ளது.
அவர்கள் இருவரினதும் நிச்சயதார்த்தம் கடந்த மார்ச் 24ம் திகதி நடைபெற்றது.
திருமணத்திற்கு முன்பு நடந்த ஹல்தி விழாவின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இவர்களின் திருமணத்திற்கு நடிகர் நானி, ஆர்யா போன்ற பிரபலங்கள் கலந்துக் கொண்டுள்ளனர்.
