விஜய் படத்தை தயாரிக்க தயார் என்றும் ஆனால் இரண்டு விடயங்கள் அந்த படத்தில் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்றும் போனி கபூர் நிபந்தனை விதித்திருப்பதாக கூறப்படுகிறது .
பிரபல பொலிவூட் தயாரிப்பாளர் போனி கபூர் தொடர்ச்சியாக மூன்று அஜித் படங்களை தயாரித்து உள்ளார்.
தற்போது அவர் தயாரித்துள்ள உதயநிதியின் ‘நெஞ்சுக்கு நீதி’ திரைப்படம் எதிர்வரும் வெள்ளியன்று திரைக்கு வரவுள்ளது.
இந்த நிலையில் அவரிடம் விஜய் படத்தை எப்போது தயாரிப்பீர்கள் என வினவப்பட்டது.
அதற்கு பதில் அளித்த அவர் “விஜய் படத்தை தயாரிக்கக் கூடாது என்றெல்லாம் எதுவும் இல்லை. நல்ல கதை மற்றும் நல்ல இயக்குநர் கிடைத்தால் விஜய் படங்களை தயாரிக்க நான் தயாராக உள்ளேன்” என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில் விஜய் படத்தையும் விரைவில் போனி கபூர் தயாரிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.