செலுத்த வேண்டிய வெளிநாட்டு கடன்கள் பல இருந்தாலும், அவற்றை மீளச் செலுத்த ஒரு மில்லியன் டொலர் கூட திரட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
ஹர்ஷ டி சில்வா எம்.பி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
வரலாற்றில் முதல் முறையாக இலங்கை கடனை செலுத்த முடியாத நாடாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஹர்ஷ டி சில்வா எம். பி நாடாளுமன்றில் தெரிவித்தார்.
இந்த நிலைமையில் இருந்து மீள்வதற்கு என்ன திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என அவர் பிரதமரிடம் வினவினார்.
பெறப்பட்ட கடன்கள் தொடர்பில் உள்ள தகவல்கள் போதுமானதாக இல்லை எனவும், சில தகவல்கள் தவறானவை எனவும் பிரதமர் பதிலளித்தார்.
இது தொடர்பில் மத்திய வங்கியின் அதிகாரிகள் உள்ளிட்ட உரிய அதிகாரிகளை அழைத்து தகவல்களை பெற்றுக் கொள்வதாகவும் அதற்கமைய அடுத்த வாரத்திற்குள் முழுமையான அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.