புதிய பிரதமரின் நியமனத்தின் பின்னரான முதலாவது நாடாளுமன்ற அமர்வு இன்று இடம்பெறவுள்ளது.
இதற்கமைய இன்று முற்பகல் 10 மணியளவில் நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமாகவுள்ளது.
இதன்போது புதிய பிரதி சபாநாயகருக்கான தெரிவு இடம்பெறவுள்ளது.
இதற்காக ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி ரோஹினி கவிரத்னவின் பெயரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எம்.பி அஜித் ராஜபக்ஷவின் பெயரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற அமர்வுக்கு முன்னதாக கட்சி தலைவர்களுடைய முக்கியமான கூட்டம் இடம்பெறும்.
ஜனாதிபதி மீதான நம்பிக்கையில்லா பிரேரணை விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மொட்டுக் கட்சியில் பலர் நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள மாட்டார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.