நிட்டம்புவ பிரதேசத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள படுகொலை செய்யப்பட்டார்.
இதனால், ஏற்பட்ட வெற்றிடத்திற்கு பொலன்னறுவை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் விருப்புரிமை பட்டியலில் 5ஆம் இடத்தில் இருந்த ஜகத் சமரவிக்ரம நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த வெற்றிடத்தை நிரப்புவதற்கான வர்த்தமானி அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.