பொலிவூட்டில் சர்ச்சை பேச்சுக்கு பிரபலமானவர் நடிகை கங்கனா ரணாவவத்.
சமீபத்தில் அவர் அளித்த செவ்வியின்போது பொலிவூட் நடிகர்களின் வாரிசுகள் ரசிகர்களோடு ஒன்றிணைய முடியவில்லை என தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில் தென்னிந்திய சினிமாக்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது என்றும் தென்னிந்திய ஹீரோக்கள் ரசிகர்களோடு ரசிகர்களாக இருக்கின்றனர்.
அதனால்தான் பொலிவூட் படங்களை விட தெலுங்கு மற்றும் கன்னட படங்கள் மிகப்பெரிய அளவில் வசூல் செய்கின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், பொலிவூட் நடிகர்களின் வாரிசுகள் அவித்த முட்டை போன்று இருக்கிறார்கள் என்றும் நான் யாரையும் தவறாக சித்தரிக்க வேண்டும் என்று கூறவில்லை என்றும் கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.
இவர் தமிழில் தாம் தூம், தலைவி போன்ற படங்களில் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.