நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளையும் ஒன்றிணைத்து அமைச்சரவை கூட்டத்தை பிரதமர் கூட்டினால் மக்களின் நம்பிக்கையை ஓரளவு பெற்றுக் கொள்ளலாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி, பிரதமர் ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரிடமும் ஆதரவு கோரி கடிதம் அனுப்புவதன் மூலம் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காது என அவர் தெரிவித்தார்.
இதற்கு முன்னரும் தாம் அமைச்சரவைகளில் பங்கேற்றிருந்ததாகவும், இந்த அமைச்சரவை மீன் சந்தையை போல் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.