புதிய அமைச்சரவையை தெரிவு செய்யும் பூரண அதிகாரம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கே உள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்று (12) முன்னாள் அமைச்சரவைக் கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
புதிய பிரதமர் நியமிக்கப்பட்டாலும் இல்லாவிட்டாலும் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு முன்னாள் அமைச்சர்களுக்கு உதவுமாறு ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, மக்களின் நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதே தனது முதல் கடமை கடமை என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.