பிரதமர் பதவிக்கு ஜனாதிபதிக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எந்த பெயரையும் பரிந்துரைக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
11 சுயேட்சைக் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவினால் பொருத்தமான பல பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டதாகவும் அந்த பெயர்கள் ஜனாதிபதிக்கு வழங்கப்படவில்லை எனவும் அவர் கூறினார்.