ஃபீல்ட் மார்ஷல் சரத் ஃபொன்சேகா புதிய பிரதமராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
சரத் ஃபொன்சேகாவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிரதமர் பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு கோரியதாக தெரிவிக்கப்பட்டது.
எனினும், சரத் ஃபொன்சேகா இதனை முற்றாக மறுத்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்ஷ பதவி துறக்க வேண்டும் என்பதே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் முதன்மை கோரிக்கையாக இருக்கிறது.
அந்த கோரிக்கையை மீறி கோட்டாபய ராஜபக்ஷ இருக்கும் வரையில் நாம் எந்த அரசாங்க பதவியையும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என சரத் ஃபொன்சேகா அறிவித்துள்ளார்.