Wednesday, March 25, 2026
30 C
Colombo
அரசியல்மஹிந்தவின் பாதுகாப்பு பிரதானியிடம் CID விசாரணை

மஹிந்தவின் பாதுகாப்பு பிரதானியிடம் CID விசாரணை

மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு பிரதானி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

காலிமுகத்திடல் மற்றும் அலரி மாளிகைக்கு முன்னால் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தி இருந்தார்கள்.

மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரி மாளிகையில் நடந்த கூட்டத்தில் கலந்துகொள்ள வந்திருந்தவர்களே இந்த தாக்குதலை நடத்தினார்கள்.

இது சம்பந்தமாக விசாரணை நடத்துவதற்காக மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புப் பிரதானி அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அமைதிப் போராட்டத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பான விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவு மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles