சஜித் பிரேமதாச பிரதமராக பதவி ஏற்க தயார் என்றால், அவரை ஆதரிக்கவும் தயார் என்று ஏனைய எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அவருக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் அணியும் ஆதரவளிக்கும் என்று தயாசிறி கூறினார்.
ஆனால் சஜித், ஜனாதிபதி பதவி விலகினால் மட்டுமே பிரதமராக பொறுப்பார் என்று ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.