அரசியல்மோதலில் ஈடுபடுவோரை கைது செய்யுமாறு ஜனாதிபதி பணிப்புரை

மோதலில் ஈடுபடுவோரை கைது செய்யுமாறு ஜனாதிபதி பணிப்புரை

கொழும்பு காலி முகத்திடலிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் இடம்பெற்று வரும் மோதல்கள் குறித்து தாம் முழுமையாக அறிந்திருப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ட்விட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் நெருக்கடியைத் தணிக்க இந்த மோதல் உதவாது என்றும் அவர் கூறினார்.

மோதலில் ஈடுபட்ட அனைவரையும் அரசியல் கட்சி வேறுபாடின்றி கைது செய்யுமாறும், மோதல்களைக் கட்டுப்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ளுமாறும் பாதுகாப்புப் படையினருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அவர் அந்தச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

இத்தருணத்தில் சகல பிரஜைகளும் அமைதியாக நடந்து கொள்ளுமாறு ஜனாதிபதி மேலும் கேட்டுக் கொண்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles