பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (09) தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், புதிய பிரதமராக நியமிக்க பல்வேறு கட்சிகள் ஏற்கனவே பல்வேறு பெயர்களை பரிந்துரைத்துள்ளன.
புதிய பிரதமராக நிமல் சிறிபால டி சில்வா, ரமேஷ் பத்திரன, சுசில் பிரேமஜயந்த மற்றும் அனுர பிரியதர்ஷன யாப்பா ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.