ஐக்கிய மக்கள் சக்தியால் ஜனாதிபதிக்கு எதிரான குற்றப் பிரேரணைக்கு பதிலாக, நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்று அண்மையில் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது.
ஆனால் அவ்வாறான நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைப்பதற்கான சட்டத்தன்மை இல்லை என்பதால், பொருத்தமான முறையில் அதனை முன்வைக்குமாறு சபாநாயகர் அறிவித்துள்ளார்.
மேலும் இந்த நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான சட்ட மா அதிபரின் ஆலோசனையையும் சபாநாயகர் கோரி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நாடாளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.